Sunday Catechism Training
Trichy July 2022
பாலர் சபை & ஞாயிறு மறைக்கல்வி தொடக்கவிழா – நாசரேத்
பிப்ரவரி 27 ஆம் தேதி நாசரேத் பங்குத்தளத்தில் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளைக் கொண்டு புதிதாக பாலர் சபையும், பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகளும் தொடங்கப்பட்டன. அன்றைய ஞாயிறு திருப்பலியை மறைக்கல்வி குழந்தைகள் சிறப்பு செய்தனர். திருப்பலியின் மறையுரையில் ஞாயிறு மறைக்கல்விக்கான தேவை குறித்து பகிரப்பட்டது. திருப்பலியின் இறுதியில் பாலர் சபையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களிடமிருந்து உறுதிமொழி பெறப்பட்டது. திருப்பலிக்குப் பின்பு ஞாயிறு மறைக்கல்வியைத் தொடங்கி வைத்து, மறைக்கல்விப் பணிக்குழுச் செயலர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த பங்குத்தந்தை அருள்பணி. சூசை அலங்காரம் அவர்களுக்கு நன்றிகள்.